நாளை பதவியில் அமரபோகும் திமுக எம்.எல்.ஏ.க்கள்.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானது. தேசிய அளவில் பாஜக 303 இடங்களை வெற்றி பெற்று  தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 பாராளுமன்ற தொகுதிகளில், 37 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. இந்த பாராளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. 09 தொகுதிகளில் அதிமுக வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் சட்டசபை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 13 திமுக எம்எல்ஏக்கள், மே 28-ஆம் தேதி (நாளை) தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் அவர் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து 29-ஆம் தேதி (நாளை மறுநாள்) 09 அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அறையில் பதவி ஏற்க உள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ.க்கள்:

ஆம்பூர் - விஸ்வநாதன், ஆண்டிப்பட்டி - மகாராஜா,  அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி,  குடியாத்தம் - காத்தவராயன், ஓசூர் - சத்தியா, ஓட்டப்பிடாரம் - சண்முகையா, பெரம்பூர் - ஆர்.டி.சேகர், பெரியகுளம் - சரவணகுமார், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, தஞ்சாவூர் - நீலமேகம், திருப்பரங்குன்றம் - சரவணன், திருப்போரூர் - இதயவர்மன், திருவாரூர் - பூண்டி கலைவாணன். 

அதிமுக எம்.எல்.ஏ.க்கள்:

அரூர் - சம்பத்குமார், மானாமதுரை - நாகராஜன், நிலக்கோட்டை - தேன்மொழி, பாப்பிரெட்டிப்பட்டி - கோவிந்தசாமி, பரமக்குடி - சதம் பிரபாகர், சாத்தூர் - ராஜவர்மன், சோளிங்கர் - சம்பத், சூலூர் - கந்தசாமி, விளாத்திகுளம் - சின்னப்பன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may 28 dmk 13 mla swearing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->