மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தவெக விஜய் தலைமையில் வருகிற 13-ஆம் தேதி... காவலாளி அஜித் குமார் கொலைக்கு நீதி கேட்டு...!
Massive protest Led by TVK Vijay 13th demanding justice murder of guard Ajith Kumar
சிவகங்கை திருப்புவனம் பகுதி மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார்.கடந்த 6-ந்தேதி, இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், கொலை வழக்கை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்திற்கு காவலர்கள் அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவலர்கள் சென்னை சிவானந்தா சாலையில் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தனர்.
இதையடுத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 13-ந்தேதி காலை, காவலாளி அஜித்குமார் கொலைக்கு நீதி விசாரணை கேட்டு பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் த.வெ.க. சார்பில் சிவானந்தா சாலையில் நடைபெற இருக்கிறது.
இந்த போராட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Massive protest Led by TVK Vijay 13th demanding justice murder of guard Ajith Kumar