வைகோவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மல்லை சத்யா - பரபரப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இயங்கி வரும் ஒரு பிரதான கட்சியான ம.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

வைகோவின் பகீரங்க குற்றச்சாட்டிற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என்றுத் தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து, மல்லை சத்யா மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அதாவது இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார். அதன்படி அவர் இன்று வைகோவை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

முன்னதாக அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மல்லை சத்யா மரியாதை செலுத்தி விட்டு போராட்டத்தை தொடங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mallai sathya protest against mdmk leader vaiko


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->