நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டி மோதல்.. அச்சத்தில் வேட்பாளர்கள்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மாவட்ட செயலாளர்களுக்குள் கட்சி ரீதியாக ஏற்பட்டுள்ள மோதலால் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் நிர்வாகிகள் அச்சத்தில் இருக்கின்றனர். 

மதுரையின் வடக்கு மற்றும் வடக்கு மாவட்டம் தெற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ தளபதி, மணி மாறன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். தெற்கு பொறுப்பாளரான தளபதி தன்னுடைய சொந்த செல்வாக்கால் பொன் முத்துராமலிங்கத்திற்கு கீழே உள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதன் காரணமாக, இவர்கள் இருவருக்கும் மறைமுக பூசல் நிலவி வருகின்றது. அத்துடன் இருவரின் ஆதரவாளர்களும் கூட பிரிந்துதான் அரசியல் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மறைமுக யுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தற்போது கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நிர்வாகிகள் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். 

மேலும் மூர்த்தி மற்றும் மணிமாறனுக்கு இடையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு இருந்த புரிதல் தற்போது இல்லை என்பதால் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருதரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வார்டுகளில் போட்டியிடம் கவுன்சிலர் நிர்வாகிகளும் கலக்கத்தில் இருக்கின்றனர். எனவே மதுரை திமுகவிற்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி என்பது பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai urban local election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->