முக ஸ்டாலினை கதறவிட்ட கூட்டணி கட்சிகள்.! மதுரையில் வீசிய மெரினா காற்று .! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து உள்ளன. கிராமங்கள் முதல் நகரம்- மாநகராட்சி வரை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பஞ்சமே இல்லாமல் தமிழகத்தில் நடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு தொடங்க மாலை 5 மணிக்கு மேல் ஆகியது. மாநாட்டு இருக்கையில் அமர்ந்த தொண்டர்கள் பலரும் இரவு 7 மணிக்கு இருக்கையை விட்டு வெளியேறி மாநாட்டு மைதானத்தில் வளம் வர தொடங்கினர்.

இதனால் மாநாட்டில் இருக்கைகள் பாதி காலியாகி வெறிச்சோடியது. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது பல இருக்கைகள் காலியாகி விட்டன.

முக ஸ்டாலினை அடுத்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இருக்ககைகள் காலியாக இருந்ததை கண்டு, "பிரியாணிக்கும், குவாட்டருக்கும் சேர்ந்த கூட்டம் அல்ல இது., தங்கள் சொந்த செலவில் வந்த செம்படை" என்று தனது தானே சமாதானம் செய்து கொண்டார்.

அடுத்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மேடையில் பேச வரும் போது, மாநாட்டில் 20 சதவிகித பேரே இருந்தனர். மாநாடுக்கு வந்தவர்கள் இருக்கையில் அமராமல் வெளியேறியதால் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அதிர்ச்சில் உள்ளினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MADURAI communists manadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->