டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஆனி ராஜா உள்ளிட்டோர் மீது தாக்குதல்; மு.வீர​பாண்​டியன் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த், 'படித்த வேலையில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்' என கூறியிருந்தமைக்கு இந்திய அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்த விவகாரம் பூதரமான நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலை கழகத்தில் உயர் கல்வி பயின்று வரும் அபிஜித் தீப்கே என்பவர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற சமூக ஊடக கட்சியை கடந்த மாதம் தொடங்கினார். இந்த கட்சிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும், இளைஞர்களும் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆனி ராஜா மீது, சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது’ என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீர​பாண்​டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

''வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள, இந்திய இளைஞர்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ‘கரப்பான்பூச்சிகள்’ என்று ஒப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மே 2026-ல், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத் திப்கே இந்த அமைப்பை உருவாக்கினார். இதில் கோடிக்கணக்கான மாணவர்கள் - இளைஞர்கள் இணைய வழியில் இணைந்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீடு முறையீடு போன்றவற்றுக்கு தார்மிக பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த அமைப்பின் சார்பாக டெல்லியில், ஜந்தர் மந்தரில் போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆனி ராஜா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் நிஷா சித்து, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியக் குழு உறுப்பினர் ஷாய், மற்றும் நிர்வாகிகள் விராஜ் தேவாங், ஹரிஷ்பாலா ஆகியோர் சங்பரிவார் அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இந்தத் தாக்குதலை நடத்திய சங்பரிவார் குண்டர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது'' என்று மு.வீர​பாண்​டியன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M Veerapandian condemns the attack on Annie Raja and others during the Cockroach Janata Party protest in Delhi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->