இன்றும் துளிர்க்கும் விசுவாசம்! ஜெயலலிதா படத்தை பார்த்ததும் உடைந்து அழுத எம்.எல்.ஏ...நெகிழ்ச்சியில் சட்டசபை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கோலாகலமாக தொடங்கிய நிலையில், புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு வருகின்றனர். இடைக்கால அவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சோழவந்தான் கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

முதலாவதாக, தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி உறுப்பினராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் உறுதிமொழி ஏற்று வருகின்றனர்.அந்த வரிசையில், பண்ருட்டி தொகுதி உறுப்பினர் மோகனை, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பதவியேற்க அழைத்தார்.

இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்து வந்த மோகன், “சட்டமன்ற பேரவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தா.மோகன் என்ற நான், இந்திய அரசியலமைப்பின் மீது முழு நம்பிக்கையும் பற்றும் கொண்டு, நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாத்து, எனக்கு வழங்கப்பட்ட கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவேன்” என்று உறுதிமொழி எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை நோக்கி, “மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா... எங்களுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள்” என்று உருக்கமாக கூறிய அவர், கண்கலங்கி கதறி அழுதார்.

இந்த எதிர்பாராத உணர்ச்சி தருணம் சட்டப்பேரவையையே ஒரு நிமிடம் அமைதிக்குள் ஆழ்த்தியது. அவையிலிருந்த உறுப்பினர்கள் பலரும் மௌனமாக அந்த காட்சியை கவனித்தனர். முதல்-அமைச்சர் விஜயும் அந்த நிகழ்வை அமைதியாக உற்றுநோக்கி கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Loyalty that still flourishes today MLA breaks down and cries after seeing Jayalalithaa picture Assembly shock


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->