அதிக வெற்றிகளை குவிக்கும் பாமக மாவட்ட செயலாளர்களுக்கு தங்க மோதிரம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் 19 மாதம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரசார வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண்கிறது. மேலும் இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவில் வெற்றியை குவிக்கும் பாமக மாவட்ட செயலாளருக்கு, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களின் பொற்கரங்களால் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LocalBodyElection pmk 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->