ஆவின் பாலில் தண்ணீரை அளவோடு கலக்க வேண்டும்! தமிழக அரசை சாடிய கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


தென்காசியில் புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு மாநாடாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் அமைதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி பல்வேறு சமூக அமைப்புகள், மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் ஒற்றுமை பேரணி நடத்த தீர்மானித்துள்ளோம். 

இயற்கை வளம் சூழ்ந்த தென்காசி பகுதியை சர்வதேச சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமானால் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு உறுதிகள் கொடுத்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. ஆளுநர் தனது கருத்தை மக்களிடம் பகிருகிறார். ஒரு மாநில அரசு சொல்லி எந்த ஒரு ஆளுநரையும் மத்திய அரசு திரும்ப பெற்ற வரலாறு உண்டா? ஆளுநர் திரும்ப பெறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பசும் பாலை பதப்படுத்துவது மேலை நாடுகளுக்கு மட்டும் தான் பொருந்தும். 

அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு இது பொருத்தமாக இருக்கும். ஆனால் இந்திய தட்பவெப்ப நிலைக்கு அது பொருந்தாது. முதலில் தமிழக அரசு ஆவின் நிறுவனம் மூலம் தரமான பாலை விநியோகிக்க முயற்சி செய்ய வேண்டும். பாலில் தண்ணீரை அளவோடு கலந்து தரமான முறையில் மக்களுக்கு விநியோகம் செய்யுங்கள் பிறகு நீங்கள் முடிவெடுக்கலாம்" என தமிழக அரசை புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnasami say Water mixed with aavin milk in moderation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->