ஆதரவாளர்களுக்கு ஆப்பு வைத்த இபிஎஸ்.. எடப்பாடி மீது பாயும் கேபி முனுசாமி, உதயகுமார்.? - Seithipunal
Seithipunal


ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வடிந்து வருகிறது. இதனுடைய வருகின்ற 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிசாமி நியமிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடமிருந்த இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி காலாவதி ஆகிவிட்டதாக சமீபத்தில் சிவி சண்முகம் அறிவித்தார். தற்போது ஓ பன்னீர்செல்வத்திடம் பொருளாளர் பதவி மட்டுமே உள்ளது. வருகின்ற பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படவும் செய்யப்பட உள்ளளவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடைய எடப்பாடி பழனிசாமி தற்போது முடிவு செய்திருக்கும் பொறுப்பாளர்களை தெரிந்து கொண்ட கேபி முனுசாமி, ஆர் பி உதயகுமார், செங்கோட்டையன், தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி இடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜெயக்குமார் துணை பொது செயலாளர் என்றும், நந்தம் விஸ்வநாதன் பொருளாளர் என்றும், சி.வி சண்முகம் தலைமை நிலைய செயலாளர் என்றும், தமிழ் மகன் உசேன் அவை தலைவர் என்றும், எஸ் வி வேலுமணி எதிர்க்கட்சித் தலைவர் என்றும். திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்றும் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்தப் பட்டியலால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் கேபி முனுசாமி. சசிகலாவுக்கு எதிரான நிலையை ஓ பன்னீர்செல்வம் எடுத்ததால் கேபி முனுசாமி அவருக்கு ஆதரவாக இருந்தார். அதன் பிறகு சசிகலா பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என தெரிந்ததும் சசிகலாவுக்கு எதிராக திரும்பி எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவினார். 

அதிமுகவின் பொது செயலாளர் ஆகும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணமானவர்களில் கேபி பழனிசாமியும் ஒன்று. அதேபோல தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது முதல், ஆர் பி உதயகுமார் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளார். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவில் இரண்டு தலைமையை, ஒற்றை தலைமையாக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வி பலமுறை சென்று சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தியவர் செங்கோட்டையன். 

இப்படி எடப்பாடி பழனிசாமிக்கு பக்கம் பலமாக இருந்த இவர்களுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர், தலைமை நிலைய செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிடம் பதவிகள் கொடுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு கிடைக்காத விரட்டியில் எடப்பாடி பழனிசாமி இடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருவதாக தகவல் வெளியேறி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kp munusamy udhayakumar posting issue for eps team


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->