கோவை வந்த மத்திய அமைச்சர்! சுத்துப்போட்ட விவசாயிகள்! - Seithipunal
Seithipunal


கோவை வருகைபுரிந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்ட 40% ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும். அதேபோல் தேங்காயின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே பாமாயிலுக்கு மாற்றாக இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும்.மத்திய அரசு கொப்பரைத்தேங்காய் விலை ரூ.108.50 விலை நிர்ணயத்தும்,உரித்த தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தும் அது விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தென்னை விவசாயிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதென்ற கோரிக்கை மனுவை வைத்தனர்.

வெங்காயப் பிரச்சனையை நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும்,தேங்காய் பிரச்சனையை உரிய துறை அதிகாரிகளோடு கலந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் உழவர் உழைப்பாளி கட்சித்தலைவர் செல்லமுத்து,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தலைவர் ஈஸ்வரன்,விவசாயிகள் பாதுகாப்பு  சங்கத்தலைவர் மந்திராச்சலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாய பிரதிநிதிகளோடு பாஜக விவசாய அணி மாநில தலைவர் G.K.நாகராஜ் உடனிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai Central Minister Farmers BJP


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->