ஸ்டாலினை தலைதூக்க விடமாட்டேன்.. சபதமேற்று சூளுரைக்கும் திருநங்கை..! அதிமுக வேட்பாளராக தேர்வு?..! - Seithipunal
Seithipunal


கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற திருநங்கை அப்சராவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முனைப்பு காண்பித்து வருகிறது. 

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக முதல்வர் வேட்பாளராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமாவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, தேமுதிக மற்றும் பிற அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

பொதுவாக அரசியல் களங்களில் தேர்தல் வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்படும் தொகுதியில், அந்தந்த நபர்களுக்கென உள்ளூர் செல்வாக்கு போன்றவை கட்சிகளின் பெரும் பலமாக பார்க்கப்படும். கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் போன்ற அரசியல்வாதிகள் களம்காணும் தொகுதியில் எப்போதும் சிறிது பரபரப்பு காணப்படும். அந்த அரசியல் கட்சி தலைவரை எதிர்த்து யார்? மாற்று கட்சியில் வேட்பாளராக நிற்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். 

அந்த வகையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் திருநங்கை அப்சரா ரெட்டி களம்காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக தலைவரான மு.க ஸ்டாலின் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் வருடத்தில் கொளத்தூர் தொகுதியில் களம்கண்ட நிலையில், இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2011 ஆம் வருட தேர்தலில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை அடைந்துள்ளார். 

வில்லிவாக்கம் மற்றும் புரசைவாக்கம் தொகுதிகளில் இருந்து மறுசீரமைப்பு செய்யப்பட்ட கொளத்தூர் தொகுதி, வில்லிவாக்கம் தொகுதியில் இருக்கையில் அதிமுகவிற்கு அமோக வரவேற்பு பெற்று இருந்துள்ளது. மறுசீரமைப்பிற்கு பின்னர் அது கடந்த இரண்டு வருடமாக திமுக வசம் சென்றுள்ளது. 

இந்த தேர்தலில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை அதிமுக கைப்பற்றியாக வேண்டும் என்று தலைமை எதிர்பார்த்து வரும் நிலையில், மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட கொளத்தூர் தொகுதி மக்களின் அன்பையும், மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அன்பையும் பெற்ற திருநங்கை அப்சரா ரெட்டியை களமிறக்க அதிமுக தலைமை ஆலோசனை செய்து வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எனக்கு கொளத்தூர் தொகுதியில் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் அமோக வெற்றியை பெற கடுமையாக உழைப்பேன் என்றும், ஸ்டாலினை இனி தலைதூக்க விடமாட்டேன் என்றும் அப்சரா கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kolathur Consultancy ADMK Candidate may Be Transgender Apsara Reddy against DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal