முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போகும் பாஜக  வேட்பாளர்! பாஜக மேலிடத்தில் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் காட்சிகள் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போதே தயாராகி வருகின்றனர். கூட்டணி, எந்த தொகுதி யாருக்கு, யாரை நிறுத்தலாம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்றாவது அணி உருவாகும் சூழலும் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஜக தலைமையிலான மூன்றாவது அணி தமிழகத்தில் உருவாகலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. மேலும், ரஜினி, கமல், சீமான், விஜய் என ஒரு பக்கம் பல்வேறு கனவுகளோடு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, பாஜக வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் துணைத் தலைவருமான அண்ணாமலையை நிறுத்த பாஜக மேலிடம் ஆலோசனை செய்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் பாஜகவில் அண்ணாமலை இணைந்தார். தற்போது அவர் பாஜகவின் துணைத் தலைவர் பதவி வகித்து வருகிறார். பாஜகவில் இணைந்தது முதல், திமுகவின் வாரிசு அரசியல், நீட் தேர்வில் திமுகவின் நாடகம், ஹிந்தி எதிர்ப்பு நாடகம் உள்ளிட்ட விவகாரம் பற்றி பேட்டி அளித்து வருகிறார்.

இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து, பாஜக அண்ணாமலையை களமிறக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kolathur BJP candidate info


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->