கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்.!
kodanandu case judge change
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கடந்த 2017-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில், கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் மறு விசாரணை, கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நடந்து வருகிறது. இது குறித்து 5 தனிப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

கொடநாடு வழக்கு விசாரணையின் போது நீதிபதி சஞ்சய் பாபா முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தவர். இவர் தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக முருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை இவர் தலைமையில் நடைபெறும்.
English Summary
kodanandu case judge change