அவன்கிட்ட கேளு., உங்க மனசு புண்பட்டுச்சா., பொறுத்துக்குங்க., கெத்தா மன்னிப்பு கேட்ட அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை ஒருமையில் பேசிய அமைச்சர் திரு. கே.என். நேரு, தம் செயலுக்கு பொறுத்தருளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரையில் கடந்த புதன் கிழமையன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கே. என். நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான நிலைய விரிவாக்க கட்டுமான பணிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என். நேரு, "சம்பந்தப்பட்டவர்களை விட்டு விட்டு என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். வெங்கடேசன்னு ஒரு ஆளு இருக்கான். அந்தாளுட்ட கேளுங்க. எங்கிட்ட கேட்கிறீங்க.." என்று ஒருமையில் பேசி பதிலளித்தார்.

இதனை சுட்டிக்காடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என தன்னுடைய ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திரு. கே.என்.நேரு,

பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.

என்று தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்கள், "கண்டனம்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், அரசியல் நாகரீகமற்றது, பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள் என்று கூறியிருந்தார். 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்களும் தாம் கூறியதற்கு வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்காமல், பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

'கண்டனம்' என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சுட்டிக்காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்களை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KN NEHRU SAY ABOUT HIS STATEMENT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->