காஷ்மீர் இந்துகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த மத்திய அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் இதுவரை இடித்து தள்ளப்பட்ட 50,000 மேற்பட்ட கோயில்களை அனைத்தும் மீண்டும் புனரமைத்து மத்திய அரசால் திறக்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

கர்நாடகவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 50,000 கோயில்கள்  இடித்து தகர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த பெரும்பாலான பண்டிட்டுகள், ஹிந்துக்கள் உள்ளிட்டோர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட காலத்தில், அங்கு இருந்த கோயில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

அப்படி இடிக்கப்பட்ட கோயில்கள் குறித்த கணக்கெடுப்புகளை தற்போது நடத்தி வருவதாக தெரிவித்த அவர், அந்த கோவில்களை  புனரமைத்து மத்திய அரசு மீண்டும் திறக்கும் என உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அங்கு இயல்பு நிலை திரும்பியதும், காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும் என்றார். பஞ்சாயத்து தேர்தலை எப்படி வெற்றிகரமாக நடந்ததோ அதேபோலவே சட்ட பேரவை தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kishan reddy new announcement for kashmir hindhu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->