ஊழல் வழக்கு | காங்கிரஸ் எம்.பி.,யை விடுவிக்க சிபிஐ முடிவு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் காங்கிரஸ் எம்.பி.ஹிபி ஈடன் உள்பட சிலர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து கடந்த ஆண்டு அந்த பெண் தொழில் அதிபரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது. அப்போது பெண் தொழில் அதிபரை காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.

மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் பெண் தொழில் அதிபரை டெல்லி அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விவகாரம் குறித்து பெண் தொழில் அதிபர் அளித்துஞ புகார் குறித்து எவ்வித ஆதாரமும் கிடைக்கப்படவில்லை.

மேலும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சி.பி.ஐ அதிகாரிகள் இந்த வழக்கை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala congress mp case cbi report


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->