மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்த ஊர் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள கொடுமை.! ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே ஏர்வைக்காடு ஊராட்சி இருக்கிறது. இந்த திருக்குவளை பகுதியில்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தார். இந்த திருக்குவளைக்கு அருகேவுள்ள ஏர்வைக்காடு ஊராட்சியில் இருக்கும் 5 கிராம மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

இந்த கிராமங்களுக்கு பேருந்து வசதிகள் இல்லை. எனவே, 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பேருந்தில் ஏறி மற்ற ஊர்களுக்கு அவர்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் ₹.200 முதல் ₹.300 வரை வசூல் செய்கின்றனர். 

இதனால், ஏழை எளிய கிராம மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. பஸ் வசதி இல்லாமல் அந்த பகுதியில் இருக்கும் மாணவ மாணவிகள் கூட சிரமப்படுகின்றனர். கடும் வெயிலில் செருப்பு கூட இல்லாமல் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்த கிராம மக்கள் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது போன்ற பேருந்து வசதி இல்லாமல் இருக்கும் காரணத்தால் அப்பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் யாரும் பெண் கொடுப்பது இல்லையாம்.

இதனால் சமீபகாலமாக இங்கிருக்கும் மக்கள் ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் மினிபஸ் இயக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளனர். இதையடுத்து இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கும் நிலையில் அரசு இருந்தும் கூட இப்படி ஒரு அவஸ்தையில் கிராம மக்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunanithi village peoples in Very Bad sitauion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->