நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தது தெரியுமா?! உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகம்!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் நடைபெற்றுவரும் உச்சக்கட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக ஆங்காங்கே கலவரம் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஆட்சி கவிழும் ஆபத்து வருமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி ஏறக்குறைய தன்னுடைய இறுதி உரையை வாசித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு, உருக்கமான ஒரு உரையை நிகழ்த்தினார். ஆதலால் அவர் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கலவரம் எதுவும் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் அடுத்த 48 மணி நேரம் 144 தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

குமாரசாமியின் உருக்கமான பேச்சை தொடர்ந்து அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஒவ்வஒரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர்.

இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தது. அவையில் மொத்தம் 204 உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பான்மைக்கு தேவையான 103 உறுப்பினர்களை பெறாத காரணத்தினால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karnataka trust vote


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->