#BREAKING || தினமும் அரை லிட்டர் பால், ஆண்டுக்கு 3 சிலிண்டர்.. இலவசங்களை வாரி வழங்கிய பாஜக.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் வரும் மே 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய பாஜக ஆட்சி இருந்தாலும் தென் மாநிலத்தைப் பொருத்தவரை கர்நாடகாவில் மட்டுமே தற்போது பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. மாநில பொது பொதுத் தேர்தல்களைப் பொறுத்தவரை கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநில பொது தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை பாஜக என்று அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கர்நாடக மாநில தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால் உயிர் மட்ட குழு ஆலோசனைப்படி பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். பாஜக ஆட்சி அமைந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவருக்கு மட்டும் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த சிலிண்டர்கள் யுகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி அன்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.

மிஷன் ஸ்வஸ்தையா கர்நாடகா என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிளினிக் திறக்கப்படும். கர்நாடகாவில் ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்க அடல் உணவகம் திறக்கப்படும். மூத்த குடி மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை வழங்கப்படும். பட்டியலின குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் 5 ஆண்டுகளுக்கான ரூ.10,000 வைப்பு நிதி வைக்கப்படும். 

குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும். கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 5 கிலோ அரிசி வழங்கப்படும்." என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு இலவசங்களை எதிர்த்து வரும் நிலையில் கர்நாடக பாஜக தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்கி உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka state BJP election manifesto has been released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->