மங்களூர் ஆட்டோ வெடிகுண்டு சம்பவம் - அதிர்ச்சி தகவலை பகிரங்கமாக வெளியிட்ட கர்நாடக முதல்வர்! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட மங்களூரு நகர் நாகுரி பகுதியில், நேற்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணியும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் , தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்ததில், ஆட்டோவில் இருந்த குக்கரில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் அதில் கண்டுபிடிக்கப்பட்டன. 

இந்த சம்பவம் குறித்து கர்நாடக டிஜிபி தெரிவிக்கையில், "இந்த குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல, ஆனால் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு பயங்கரவாத செயல். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "முதல்கட்ட தகவலின்படி ஆட்டோவில் வெடித்த பொருள் எல்இடி-யுடன் இணைக்கப்பட்ட கருவி என்பது தெரிய வந்துள்ளது. இது ஒரு பயங்கரவாதச் செயல்.

ஆட்டோவில் கிடந்த ஆதார் அட்டையில் இருந்த பெயரும், ஆட்டோவில் இருந்த நபரின் பெயரும் வெவ்வேறானது. சந்தேகப்படும் அந்த நபரிடம் ஹூப்ளி முகவரி கொண்ட டூப்ளிகேட் ஆதார் அட்டை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் அந்த நபர் கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்துள்ளது செல்போன் சிக்கனல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் புலனாய்வுப் பணியகம் (ஐபி) அதிகாரிகளும், மாநில காவல்துறையுடன் இணைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka CM Say About Mangalore Auto Bomb Blast


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->