மக்களின் கோரிக்கையே "எங்களின் தேர்தல் அறிக்கை".! - திமுக எம்.பி கனிமொழி.!! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பி.டி.ஆர், டி.ஆர்.பி ராஜா, டிகேஎஸ் இளங்கோவன், எம்எல்ஏ எழிலன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி "தேர்தல் அறிக்கை குழு தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்கு இருக்கக்கூடிய மக்கள், பல்வேறு தொழில்கள் செய்யக் கூடியவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் எனப் பலரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்க திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து மீண்டும் சென்னைக்கு திரும்பிய பிறகு ஒன்று கூடித் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதாக முடிவெடுத்துள்ளோம். முதலில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லப் போகிறோம் என்ற பட்டியலை இன்று முடிவு செய்திருக்கிறோம். இதனை முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெற்று அடுத்தகட்ட முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மக்களின் கோரிக்கைகள் குறித்து அடுத்தடுத்த கூட்டங்களில் ஆலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிப்போம்" என தெரிவித்துள்ளார். அப்போது செய்தியாளர் ஒருவர் திமுகவின் கதாநாயகனாக எந்த மாதிரியான விஷயம் இருக்கும் என்று கேள்வி எழுப்ப அதற்க்கு "தேர்தல் அறிக்கை கதாநாயகியாக கூட இருக்கலாம்" என பதிலளித்தவாறுபுறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi mp spoke about dmk lokshaba election manifesto


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->