கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி.. ராகுல்காந்திக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில பொது தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் 306 அறைகளில் 4,258 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

கர்நாடக மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிவு நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் 137 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதில் தற்பொழுது வரை 82 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. கர்நாடகாவை ஆளும் பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் 'ஸ்ரீ ராகுல் காந்தி ஜி, இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்திஜியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள், அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் உலகின் சக்திகளை அன்புடனும் பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள். 

துணிச்சலோ நெஞ்சு படபடக்கவோ இல்லாமல் உங்களது நம்பகமான மற்றும் நம்பகமான அணுகுமுறை மக்களுக்கு புதிய காற்றை சுவாசித்துள்ளது. பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர்.  வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள்!' என தெரிவித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhaasan wishes to Rahul Gandhi for Karnataka assembly election results


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->