கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கரூர் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய கமல் , முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் நான் சொல்லவில்லை. 

தேச தந்தை என அழைக்கப்படும் காந்தியின் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான். அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது , கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி  உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடந்து, கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க, வழக்கறிஞர் சரவணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தேர்தல் பிரசாரம் தொடர்பான முடிவுகளை தேர்தல் ஆணையம்தான் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் சரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
 

English Summary

kamal haasan case in high court


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal