செய்தி நிருபரை கட்சியில் சேர சொன்ன கமல்..! - Seithipunal
Seithipunal


கட்சியை வலுப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலிடம் சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர்.  அதற்கு 'நீங்கள் கட்சியில் சேருங்கள் நான் சொல்கிறேன்' என வித்யாசமாக பதிலளித்துள்ளார்.

அத்துடன், நூறாண்டுகள் மக்கள் நீதி மய்யம் செயல்பட வேண்டும் என்பதுதான் ஆசை. ஏன் ஆசைப்படக்கூடாது. உங்கள் பிள்ளை நூறு வருடங்கள் வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட மாட்டீர்களா? உங்க அப்பா ஆசைப்பட மாட்டாரா? அதே ஆசை தான் எனக்கும். கொண்டு செல்கிறவர்கள் பொறுப்பு என்ன என்பதை தான் நான் ஞாபகப்படுத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனக்கு 70 வயது ஆகிவிட்டதாகவும், மக்கள் நீதி மய்யம் நூறு வருடம் வாழ வேண்டும் என்றால் யார் வேலை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக கட்சியினர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சில சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கிறதாகவும், அதையெல்லாம் சரி செய்து விடுவோம் என்று நம்பிக்கை தனக்கு இருக்கிறது எனவும், தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், கட்சியில் இருக்கும் அனைவருமே வேலை செய்கிறார்கள். யாருமே இங்க 24×7 அரசியல்வாதி கிடையாது எனவும், அவரவர்களுக்கு வேலை இருக்கிறது. அவர்கள் வேலையை செய்து கொண்டு கட்சிப் பணியையும் செய்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மீதமுள்ள இருக்கும் நேரத்தில் எல்லாம் அவர்கள் கட்சி வேலையை தான் செய்வார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamal asked a news reporter to join the party


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->