திமுகவின் இரட்டை வேடத்தை புட்டுப்புட்டு வைத்த முக்கிய புள்ளி.. ஆடி போன திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் மற்றும் கடம்பூர் பகுதிகளில் அதிமுக நிகழ்ச்சியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர், பாராளுமன்றத்தில் தயாநிதிமாறன் இந்தி பேசியதை பெருமையாக பேசியவர் கருணாநிதி. 

மத்திய அரசு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்பள்ளியில் இடம்பெற திமுகவினர் டோக்கன் பெறுகின்றனர். உண்மையாக இவர்கள் இந்தியை எதிர்த்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பெற்ற இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் திமுக தமிழ் உணர்வை பாராட்டலாம்.

திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. ஜல்லிகட்டு, காவிரி நீர் பிரச்சினை, நெய்வேலி என்எல்சி பங்கு விற்பனை உள்ளிட்டவைகளில் திமுக இரட்டை வேடம் தான் போடுகிறது. சர்க்காரியா கமிஷன் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி கச்சத்தீவை தாரை வார்த்தார். அந்த பிரச்சினையில் திமுக இரட்டை வேடம் போட்டது. 

தமிழர்களின் உணர்வுகளை காக்கின்ற இயக்கம் அதிமுக. நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை வந்தவுடன் அரசு மாணவர்களை தயார்படுத்த புதிய பாடத்திட்டம், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 10 சதவீதம் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju says about dmk story


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->