ரஜினியின் அடுத்த கட்ட திட்டம்.. அதிமுகவில் இருந்து முதல் ஆளாக துண்டு போட்ட முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ம் தேதியன்று கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். இதனிடையே நான் கட்சி ஆரம்பித்து அரசுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்திற்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு கட்சியை தொடங்குவதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இந்நிலையில்,  கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ரஜினி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது, தொடங்காமல் இருப்பதும் அவருடைய விருப்பம். 

பொதுவாக நடிகர்கள் யார் கட்சி தொடங்கினாலும் அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் யாருக்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்பது ரஜினியின் சொந்த விருப்பம். அதற்காக அவரை கட்டாயப்படுத்த முடியாது. அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju press meet about rajini


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->