எங்கள் கூட்டணியில் ஒரு குழப்பமும் இல்லை - அமைச்சர் கேஎன் நேரு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற அக்டோபர் மாதம் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 12 அன்று எண்ணப்படவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், ஆளும் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. நாங்கள் ஒன்றாக இருந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று, திமுக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில், "தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் அதிமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு ஏற்றவாறு தேர்தல் நடத்தப்படும். 

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான பணிகளும் தொடங்கிவிட்டன.திமுக கூட்டணியில் அனைவரும் ஒன்றாக உள்ளோம். எந்த விரிசலும் இல்லை. ஒன்றாக இருந்து, தேர்தலில் வெற்றி பெறுவோம்". என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k n nehru say about local body election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->