சென்னையில் ரவுடி லாக்கப் மரணம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்! - Seithipunal
Seithipunal



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிலா செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "ஆகாஷ் (வயது 21) என்ற இளைஞரை, சென்னை, பெரம்பூர், ஓட்டேரி காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் விசாரணைக்கு செப்டம்பர் 21 அன்று அழைத்துச் சென்றுள்ளனர்.

அன்றிரவே ஆகாஷ் சுயநினைவு இழந்து கை, கால்கள் கட்டப்பட்டு ஏகாங்கிபுரம் ஏரிக்கரை ஓரமாக கவலைக்கிடமான நிலையில் கிடந்துள்ள தகவலை ஆகாஷின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். உடனடியாக மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த ஆகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29.9.2022) மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக இவரை தாக்கியது மட்டுமின்றி மரமணடையும் நிலையில் கூட அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் கை, கால்களை கட்டி ஏரிக்கரையில் வீசிச் சென்றது கொடூரத்தின் உச்சமாகும். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இக்கொடூர கொலையினை வன்மையாக கண்டிப்பதுடன், கொலை வழக்கு பதிவு செய்து, இம்மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், இவரது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருவது  காவல்நிலையத்திற்கு மக்கள் செல்வதற்கே அச்சப்படும் சூழ்நிலை உருவாகிவிடும். மாண்புமிகு தமிழக முதல்வரும், காவல்துறை இயக்குநரும் இனி காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்திய பின்னரும் இத்தகைய மரணங்கள் தொடர்வது இத்துறையில் சிலர் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவது வெளிப்படுகிறது.

இதுகுறித்து அரசும், காவல்துறையும் உரிய ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, காவல்துறை சீர்திருத்தங்களை மக்களும், ஜனநாயக சக்திகளும் வற்புறுத்த முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்." என்று கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Balakrushnan say about chennai lockup death sep


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->