சென்னைக்கு வரும் வாரிசு! வரவேற்க வாங்க - ஸ்டாலினை நேரில் அழைத்த பாலகிருஷ்ணன்! - Seithipunal
Seithipunal


இன்று (07.1.2023) காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 

மேலும், பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியும், கியூபப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்ட பிடல் காஸ்ட்ரோ அவர்களுடன் இணைந்து போராடிய புரட்சியாளரும், உலகப் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளருமாகிய சேகுவேரா புதல்வியார் அலெய்டா குவேராவும், அவரது மகள் பேராசிரியர் ஸ்டெஃபானி ஆகியோருக்கு சென்னையில் 18.1.2023 அன்று நடைபெறவுள்ள வரவேற்பு விழாவிற்கு முதல்வர் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பிதழ் அளித்தார்.

தொடர்ந்து தமிழக பிரச்சனைகள் அடங்கிய மனுக்களை முதல்வரிடம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்தினார். 

அதில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வர்ணாசிரம அடிப்படையில் பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை கடைபிடிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு விழா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. (மனு இணைக்கப்பட்டுள்ளது)

தஞ்சை - கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான், ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையிலிருந்து விவசாயிகளை   விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தினோம்.

தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்கள், தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருவது தொடர்ந்து கொண்டுள்ளார்.  

தமிழக ஆளுநராக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுப்பது மறுப்பது, குறிப்பாக, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். 

மேலும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநயாக இயக்கங்களும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. அது குறித்த  தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை தெரியப்படுத்தினோம்.

மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளையும் கேட்டறிந்த முதலமைச்சர் இவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இச்சந்திப்பின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் உடனிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k balakrushnan meet cm stalin 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->