மீண்டும் மத்திய அரசை கலாய்த்த சிறுவர்கள் நிகழ்ச்சி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புலிகேசி மன்னர் போன்றும் மங்குனி அமைச்சர் போன்றும் வேடமிட்ட இரண்டு குழந்தைகள் பாரத பிரதமர் மோடி குறித்தும் மத்திய அரசு குறித்தும் கேலி, கிண்டலாகப் பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் சம்பந்தப்பட்ட சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசில் ஜனவரி 15ஆம் தேதி அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மத்திய அரசை கலாய்த்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Junior super stars show imitate PM Modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->