நாள் குறித்து., போராட்டத்தை அறிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.! காரணம் என்ன? முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக பல்கலைகழகம் உருவாக்கப்படும் அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த பல்கலைக்கழகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி விழுப்புரம் நகரில் உள்ள பழைய பழைய வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைகழகத்தை திறந்து வைத்தார்.

விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பெரிது வரவேற்பு அளித்து உள்ளனர். இதற்கிடையே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழவே, தற்போதைய திமுக அரசு இந்த பல்கலைக்கழகத்தை முடக்க முயற்சி செய்வதாக அதிமுக குற்றம் சாட்டி வருகிறது.

மேலும், விழுப்புரத்தில் அமையவுள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்துக்கு உரிய நிதி ஒதுக்கக்கோரியும், பல்கலைக்கழகத்துக்கு பதிவாளரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசை கண்டித்து வரும் 26ம் தேதி விழுப்புரத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalitha University iisue CV Shanmugam protest announce


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->