சசிகலா விடுதலை விவகாரம்.. முதலில் வருத்தமடைய போவது அவர்கள் தான்.! அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என கூறப்பட்டது.

சசிகலா செலுத்த வேண்டிய 10 கோடி அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று 2022 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்,  செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா சிறையில் இருந்துவெளியே வருவது உறுதி என தெரிவித்தார். 

ஆனால், செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா சிறையிலிருந்து வெளிவரவில்லை. தற்போது, சசிகலா அடுத்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், சசிகலா விடுதலை தாமதமாவதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சசிகலா வெளியே வந்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அவர்கள் குடும்பம் தான். சசிகலா வெளியே வராவிட்டால் முதல் வருத்தமடைவது அவர்கள் குடும்பம் தான். இதில், எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும், வருத்தமும் இல்லை என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayakumar press meet about sasikala release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->