ஜல்லிக்கட்டு தடை முதல்., ஸ்டாலின் விரட்டியடிப்பு வரை.! ஜல்லிக்கட்டை மீட்ட மாணவர்களின் போராட்டம்.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், எருது ஓட்டம் மற்றும் பிராணிகளை வதைப்படுத்தும் அனைத்து பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

2007-ல் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தடை உத்தரவை முழுவதும் ரத்து செய்து, அறுவடை காலங்களில் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கையில் எடுத்த பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த வழக்கு விசாரணையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றம் ரேக்ளா ரேஸ்க்கு மட்டும் அனுமதி வழங்கி, ஜல்லிக்கட்டுக்கு தடையை நீடித்தது.

தமிழக அரசு இந்த சம்மந்தமாக சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதன்காரணமாக பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றியது. 

ஆனால் அடங்காத பீட்டா அமைப்பு, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராக 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில் 7.5.2014 அன்று ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்தது. இந்த உத்தரவால் 2015-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தும் நோக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் பிராணிகள் பட்டியலில் இருந்து காளையை சேர்த்து பாஜக தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அதற்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிரந்தர தடையை மறு சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு அந்த ஆண்டு நவம்பர் மாதம் தள்ளுபடியானது. 

இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று தமிழக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. இப்படி ஒரு போராட்டத்தை உலகம் இதுவரை கண்டது இல்லை எனும் அளவிற்கு போராட்டம் நடைபெற்றது. 

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆதரவளிக்க சென்றவரை வெளியே செல்லுங்கள் என்று துரத்தி அடித்து அனுப்பினர். மேலும், இந்த மெரினா போராட்டத்தையும் கொச்சை படுத்தும் விதமாக திருமாவளவன் சொல்லிய வார்த்தை (உணவு பொட்டலங்களில் ஆணுறை வழங்கப்பட்டது) பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மாணவர்களின் இந்த தனிப்பட்ட போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு ஜன.21-ஆம் தேதி நிறைவேற்றி, ஜன.23-ம் தேதி சட்ட பேரவையில் நிரந்தர சட்டமாக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டுக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக மதுரை உட்பட 10 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அனுமதி வழங்கி உள்ளது. 

ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், சிவகங்கையில் 1 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikattu in tamilnadu


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal