ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு மீது கல்வீச்சு.. பரபரப்பில் ஆந்திரா.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திராவில் மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மக்களவை மற்றும் சட்டபேரவை தேர்தலிலும் தனித்துப் போட்டிருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. சந்திரபாபு நாயுடுயின் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. நடிகர் பவன் கல்யாணியின் ஜனசேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலம் அமராவதி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது சமூக விரோதிகள் கல்லால் தாக்கி ஜெகன்மோகன் ரெட்டி நெத்தியில் வெட்டுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் மீது கல்வி நடைபெற்றதை தொடர்ந்து, விஜயவாடா பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீச்சு சம்பவம் மீண்டும் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல் வீசிய சமூகவிரோதிகளை தெலுங்கு தேசம் கட்சியினர் பிடிக்க முயன்றனர் ஆனால், அவர்கள் தப்பித்து ஓடிவிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு பேசுகையில், என் மீது கல் வீசியவர்களை மக்கள் சும்மா விட மாட்டார்கள். கஞ்சா, பிளேடு கும்பல் இங்கு வந்துள்ளது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.  ஆந்திர மாநிலத்தில் இரும்பெரும் தலைவரின் மீதும் கல்வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்களை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaganmohan reddy and Chandrababu naidu stone attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->