"அதிமுக 100 நாள் கூட தாங்காது." ஜெ.தீபா பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார். 

அதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் படி, இன்று ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு ஜெ.தீபா அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி முதலில் சசிகலா தான் தண்டிக்கப்பட வேண்டியவர். 

ஜெயலலிதாவை போல கட்சியை வழிநடத்தும் தலைவர்கள் இல்லை. பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் அவர்களுக்கு இருக்கிறது. இப்படியே போனால் அதிமுக என்னும் கட்சி 100 நாட்கள் கூட இருக்காது என்று தான் நினைக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J deepa press meet and make controversy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->