வயசுக்கு வந்தாலே போதும், இஸ்லாமிய சிறுமி திருமணம், தாம்பத்தியம் கொள்ளலாம் - டெல்லி உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


18 வயது நிரம்பவில்லை என்றாலும், பருவம் வந்த இஸ்லாமிய சிறுமிகள் தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று, டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி இஸ்லாமிய ஜோடி மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில், "எங்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களை பிரிக்க முயல்கின்றனர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, 18 வயது பூர்த்தியடையாவிட்டாலும், இஸ்லாமிய பெண் பருவமடைந்திருத்தாலே திருமணத்திற்கான தகுதி என்று, முகமதிய சட்டத்தின் கொள்கைகளை மேற்கோள் காட்டினார்.

எனவே, இருவரும் விரும்பி உடலுறவில் ஈடுபட்டதால், இது பாலியல் வன்கொடுமையாகாது. இந்த திருமணம் இஸ்லாமிய விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெற்றுள்ளதால், சிறுமி கணவருடன் இருக்கலாம். இதில் பெற்றோர்கள் குறுக்கிடக்கூடாது" என்று தீர்ப்பு வழங்கினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

islam girl marriage age issue case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->