பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்த இஸ்லாமிய கட்சியின் மாநில தலைவர்.! - Seithipunal
Seithipunal


ஒளிமயமான எதிர்காலம் உருவாக பொங்கல் நன்னாளில் உறுதியேற்போம் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அந்த வழுத்துச் செய்தியில், "விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு இந்நாளில் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் என வரிசையாக வருவதால் இந்நாளை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

உலகத்தார் அனைவருக்கும் உணவளிக்கும் உழவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். விதை, உரம், பூச்சி மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். நதி நீர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அதற்கான திட்டங்களை வகுத்து, விவசாயகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென பொங்கல் திருநாளில் இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், மண்ணின் மகத்துவம், உழைப்பின் அருமை, கால்நடைகளுக்கு நன்றி செலுத்துதல், முன்னோர்களை வணங்குதல் என பல்வேறு சிறப்புகளுடன் பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாண்பு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடர வேண்டும்.

வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களும் பொங்கல் கொண்டாட உதவ வேண்டும். மக்களின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி, ஒளிமயமான எதிர்காலம் உருவாக வேண்டும்.

லஞ்சம், ஊழல், கடன், கருப்புப் பணம், வேலையின்மை போன்ற பழையன கழிந்து, வேலைவாய்ப்பு, தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் பொங்கலாக இந்தப் பொங்கல் அமைந்திட வேண்டுமென, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை இந்திய தேசிய லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று முனிருத்தீன் ஷெரீப் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INL PARTY WISH PONGAL 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->