அதிமுகவுக்கு கல்தா.. பாஜகவுடன் கைகோர்க்கும் பிரேமலதா.!! ஒரு‌ ராஜ்யசபா உறுதி.!! - Seithipunal
Seithipunal


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நாடாளுமன்ற கூட்டணி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் திடீரென தேமுதிக காத்தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. 

அதிமுகவை தவிர்த்து தற்போது பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வரும் தேமுதிக ராஜ்யசபா வழங்கும் கட்சியுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

அதிமுகவுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு விடுத்த வில்லை. இந்த நிலையில் தான் பாஜகவுடன் இன்று அதிகாரப்பூர்வமாக தேமுதிக பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர்கள் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளனர். தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரேமலதா உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info dmdk alliance talking with BJP today


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->