அதிமுக-பாஜக களேபரம்! மா.செ உடன் அ.மலை ரகசிய மீட்டிங்! வெளியான பரபரப்பு தகவல்!
Info Annamalai consult with district secretary on AIADMK alliance issue
நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பிற்பகல் செய்தியாளர்கள் சந்திக்கின்ற போது அறிவித்தார்.
அதிமுக தலைமையின் முடிவாகத்தான் நான் அறிவிக்கிறேன் எனவும் அவர் பகிரங்கமாக செய்தியாளராக சந்திக்கும் தெரிவித்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறினால் மேலும் சில கட்சிகள் அதிமுக தலைமை ஏற்று கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் கூட்டணிக் களமும் மாறும் என செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தான தகவல் தற்போது கசிய தொடங்கியுள்ளன. அதாவது அதிமுக தற்போது எடுத்துள்ள நிலைப்பாட்டில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பின்வாங்க போவதில்லை என்றும், ஏற்கனவே அதிமுக பாஜக இடையேயான கருத்து மோதல் குறித்து டெல்லி தலைமைக்கு தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழக பாஜக தலைமையை அதிமுக தரப்பு விமர்சனம் செய்தது குறித்தான விரிவான அறிக்கையையும் டெல்லி தலைமைக்கு தமிழக பாஜக அனுப்பி வைத்துள்ளது என அண்ணாமலை தரப்பு தெரிவித்துள்ளது. அதிமுக தற்போது எடுத்து உள்ள நிலைப்பாட்டில் தமிழக பாஜக தலைமை உறுதியுடன் இருப்பதாக போவதாகவும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் அண்ணாமலை ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Info Annamalai consult with district secretary on AIADMK alliance issue