எந்த சவாலையும் நேரடியாக எதிர்கொண்டு பதில் சவால் விடுவோம் - பிரதமர் மோடி அதிரடி..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் வரும் மாதம் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில்., அங்குள்ள ரோட்டாக் பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி., நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கி வைத்து பேசினார். 

அந்த நிகழ்ச்சியில்., தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே வளர்ச்சி., நம்பிக்கை மற்றும் மாற்றத்தினை இந்தியா சந்தித்துள்ளது. முடிவிற்கும் தன்மை., கொள்கையின் உறுதிப்பாடு., முன்னேற்றம் மற்றும் நல்ல நோக்கத்திற்கு அடிப்படையாக அனைத்தும் இருந்தது. 

இந்திய மக்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடிப்படையில் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் விவசாய துறையில் பெரிய முடிவுகளை எடுத்து, திறமை படைக்கும் அரசாக மத்திய அரசு பதவியேற்றுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடவும்., சகோதரர்கள் முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் 100 நாட்களில் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

jammu kashmir ladakh, jammu, kashmir, ladakh,

இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு சவாலிற்கும் பதில் சவால் விடும் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்பதினை உலக நாடுகள் தற்போது கண்டுள்ளது. அது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் விபகாரமாக இருந்தாலும் சரி., தண்ணீர் தொடர்பான பிரச்சனையாக இருந்தாலும் சரி., சவால்களை நேரடியாக எதிர்கொண்டு வெற்றியடையும் திறமை நம்மிடம் உள்ளது. 

இந்தியாவில் இருக்கும் 130 கோடி மக்களுக்கும் தேவையான தீர்வுகளை கண்டறிய துவங்கியுள்ளோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் விருப்பங்கள் நிறைவேற்ற புதிய வகையான அணுகுமுறைகள் விரைவில் துவங்கப்படும். மேலும்., பொருளாதாரத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் துறைகளின் வளர்ச்சிக்கு உதவியாக திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian prime minister speech about jammu ladak problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->