தேனியில் நா.த.க.- த.வெ.க இடையே மோதல்; த.வெ.க. நிர்வாகி உள்பட 03 பேர் கைது; தலைமறைவாகியுள்ள இருவருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


தேனியில் நாதக- தவெக இடையே நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த 03 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாதக- தவெக இருதரப்பு மோதலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தவெக தேனி தெற்கு மாவட்ட பொருளாளர் கவுதம், தனவந்தன், வசந்த் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தலைமறைவாக உள்ள தவெக தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, நகர செயலாளர் சலாம் ஆகியோருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In a clash between NTK and TVK members three people including a TVK office bearer were arrested


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->