அது "கிணற்றுத் தவளைகளின் கனவு".. திருமாவளவனுக்கு எச்.ராஜா பதிலடி..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை கடந்த மார்ச் 1ம் தேதி கொண்டாடினார். அதனை ஒட்டி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் தேசிய அளவிலான எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் திமுக சார்பில் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரத் அப்துல்லா, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இது குறித்து கருத்து தெரிவித்திந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் "அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை இணைக்கும் பணியில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஈடுபட வேண்டும்.

பாஜகவை வீழ்த்த முதல்வர் மு.க ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் ஏற்கனவே பல வியூகங்களை பாஜகவுக்கு எதிராக வகுத்து விட்டார்" என தனது கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருமாவளவனின் கருத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கிணற்றுத் தவளைகளின் கனவு. நடந்து முடிந்த 3 மாநில தேர்தலில் 2ல் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி. மேகலயாவிலும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இம்மாநிலத்தில் 1 அல்லது 2 இல்லையேல் 0 மண்குதிரையை நம்பி மணல் கோட்டை" என திருமாவளவன் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja responds to Thirumavalavan comment on bjp


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->