சொன்னதை செய்த முதல்வர் பழனிசாமி! தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்! சட்டப்பேரவையில் அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் மேலும் 2 மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில் தற்பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரும், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலும், நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்கள்.

இரண்டு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் வேலுமணி  தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு என 10 மாநகராட்சிகள் இருந்த போது அதன் பிறகு கடந்த ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் திண்டுக்கல் என இரண்டு மாநகராட்சிகள் அறிவிக்கப்பட்டது. 

ஒசூர் மற்றும் நாகர்கோவிலை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை  எடுக்கப்படும் என எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார் அதனையடுத்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hosur and nagercoil promoted as corporation


கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
கருத்துக் கணிப்பு

இந்தியா தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்ற போவது எப்படி?!
Seithipunal