வானதி சீனிவாசனுக்கு ஐசியூவில் சிகிச்சை; உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை..!
Hospital Statement Regarding Vanathi Srinivasans Health
கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போட்டியிடுகிறார். கடந்த 04 நாட்களாக தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் 48 மணி நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவரது தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
"வானதி சீனிவாசன் நேற்று மதியம் 02:50 மணிக்கு வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்தபோது, அவர் எடுத்த மருந்துகளில் ஒன்றிற்கு லேசான அலர்ஜி எதிர்வினை ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று இரவு 08 மணிக்கு கண்காணிப்புக்காக ஐசியு (ICU) பிரிவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உணர்வுடன் இருந்து, பேசக்கூடிய நிலையில் மிகவும் நலமாக உள்ளார்.
முழுமையான குணமடைய குறைந்தது மேலும் 3 முதல் 4 நாட்கள் சிகிச்சை தேவைப்படும்.'' என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
Hospital Statement Regarding Vanathi Srinivasans Health