கடும் தாக்கு! தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது காங்கிரசுக்கு கவலையளிக்கிறது போல...! - எச்சரிக்கை விடுத்த மோடி - Seithipunal
Seithipunal


இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி, உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள தனது தொகுதியான வாரணாசி தொகுதிக்கு சென்றார்.அங்கு நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, 2000 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உபகரணங்கள் வழங்கியதோடு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிகள் நாட்டியும் வைத்தார்.

அதன் பிறகு விழாவில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது,"சிவபெருமானின் ஆசியால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. அந்த போரின் வெற்றியை நான் இன்று சிவபெருமானின் காலடியில் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன். நாட்டில் அநீதியும், அக்கிரமமும் தலைவிரித்து ஆடும் போது சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடுவார்.

அது தான் தற்போது நடந்துள்ளது.சமாஜ்வாடி கட்சியினருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன். இது புது பாரதம். எதிரிகளுக்கு நமது கடற்படையும், விமானப்படையும் பதில் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எதிரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசும், அவர்களது நண்பர்களும் ஏற்க மறுத்ததை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ்காரர்களும், சமாஜ்வாடி கட்சிக்காரர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் போரில் இந்தியா சுயசார்புடன் செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.

இருப்பினும், இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்துக் கொண்டே இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கூட சமாதான ஒரு செயல் என்று காங்கிரசார் கிண்டல் செய்வது தவறு.காங்கிரஸ் ஆட்சியின்போது அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

தற்போது தீவிரவாதிகள் கொல்லப்பட்டதும் மிகவும் கவலைப்படுகிறார்கள். சிந்தூர் என்ற பெயர்கூட காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது.தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிரடியாக நடந்துக் கொண்டுதான் இருக்கும்.தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு உள்ளன. இதனால் இந்தியாவும் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் கவனமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார். இதில் காங்கிரஸ்ஸை சரமாரியாக வார்த்தைகளால் தாக்கியுள்ளார்.இதற்கு காங்கிரஸிடமிருந்து பதிலை எதிர்கொண்டு அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy attack It seems Congress is worried about killing terrorists Modi warns


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->