தேர்தலில் யாருடன் கூட்டணி? ஆலோசனையில் இறங்கிய ஜி.கே வாசன்.! - Seithipunal
Seithipunal


2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் ஒப்பந்தபடி தமாக தலைவர் ஜி.கே வாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, பாமக, தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கூட வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக அறிவித்த பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் அதிமுக பக்கம் செல்லுமா? அல்லது பாஜக பக்கத்தில் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தான ஆலோசனையில் இறங்கியுள்ளார். மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் மாநிலத்தில் அதிமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் ஜி.கே வாசன். அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததால் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற குழப்பம் தமிழ் மாநில காங்கிரஸில் நீடித்து வருகிறது.

இதற்கு முடிவு கட்டும் விதமாக இன்னும் சில வாரங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டி, அதில் வாக்கெடுப்பு நடத்தி, எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் கூட்டணி முடிவு செய்ய ஜி.கே வாசன் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gkvasan starts consult for lak sabha election alliance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->