செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது சரியானதே..! தமாகா ஜி.கே வாசன் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர் இதனால் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று மாலை உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, உள்பட திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி நிறுத்தி வைத்து உள்ளார். இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது சரிதான் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மேதகு தமிழக ஆளுநர் அவர்கள், திரு. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியது சரியானதே. நீதி,நியாயம் நிலைநாட்டப்பட, மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தமிழக ஆளுநர் அவர்களின் முடிவு உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan said SenthilBalaji removed from minister post was right


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->