அந்த கூட்டணி முரண்பாடின் மொத்த வடிவம்..! போட்டு‌ தாக்கிய ஜி.கே‌ வாசன்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று பாஜக தொகுதி பங்கிட்டு குழுவுடன் ஜி கே வாசன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன் கூறியதாவது "இந்தியா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவமாக உள்ளது. பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.

தேர்தல் குழு அமைத்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் பாஜகவுடன் தொகுதி எண்ணிக்கை குறித்து ஆலோசித்தோம். மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் விருப்ப‌ மனு விநியோகம் செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gkvasan criticized Indi alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->