ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா எம்பி சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. தற்போது திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா மூன்று இடங்கள் கிடைத்துள்ளது. சில நாட்கள் முன்பு திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, திருச்சி சிவா, என் ஆர் இளங்கோ, அத்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றன.

பல நெருக்கடிகளுக்கு பிறகு  அதிமுக தங்கள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதன்படி, அதிமுக தம்பிதுரை, கேபி முனுசாமி, ஜி கே வாசன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அதிமுக அறிவித்துள்ளது.

ராஜ்யசபா எம்பி சீட்டால் அதிமுக கூட்டணி கட்சிகள் மூலம் பல நெருக்கடியை சந்தித்துள்ளது. தேமுதிக ராஜ்யசபா எம்பி சீட்டை கொடுத்தே தீரவேண்டும் என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது. 

இந்த சமையத்தில் சத்தமே போடாமல் ஜி.கே. வாசன் ராஜ்யசபா எம்பி சீட்டை கேட்டு டெல்லியிலிருந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலமாக பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து அங்கிருந்து அதிமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். பாஜக மேலிடம் கொடுக்கும் அழுத்தம் தங்க முடியாமல் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும்  ஜி கே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி சீட்டை ஒதுக்கியதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan mp seat reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->